தமிழ்நாடு வெற்றி ஒலிம்பிக் திட்டம்Tamil Nadu Victory Olympic scheme
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக தமிழ்நாடு ஒலிம்பிக் திறன் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள திறன் வாய்ந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் அளவுக்குச் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறும் தனிநபர் விளையாட்டு வீரர்களுக்கு 25 லட்சம் ரூபாயும், குழு விளையாட்டு வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும். அவர்களில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 6 கோடி ரூபாய், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 4 கோடி ரூபாய், வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். அதுபோல், தேசிய-சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.To make Tamil Nadu India's sports capital, a Tamil Nadu Olympic Skill Development scheme will be introduced. Through this, talented athletes across Tamil Nadu will be identified and given international-standard coaching to the level of winning Olympic events. Individual athletes from Tamil Nadu who qualify to participate in the Olympics will be given Rs 25 lakh in assistance, and team-sport athletes Rs 10 lakh. Of them, Tamil Nadu athletes who win an Olympic gold medal will be given Rs 6 crore, silver medal winners Rs 4 crore, and bronze medal winners Rs 3 crore as cash prizes. Similarly, financial assistance will be given to 500 athletes who excel in national and international sports competitions.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 41)Manifesto promise (p. 41)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.