வாக்குறுதிPromised
வெளிநாடு வாழ் தமிழர்களையும் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தும்வகையில், கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• உலகத் தமிழர் நலன் மற்றும் முதலீட்டு ஆணையம் – முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள், அவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரைவாக செய்து கொடுக்கப்படும்.
• வெளிநாடுவாழ் தமிழர் முதலீட்டு மாநாடு: வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தின் ஸ்டார்-அப் நிறுவனங்கள், உள் கட்டமைப்புகள் மற்றும் தொழில்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக, ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுவாழ் தமிழர் முதலீட்டு மாநாடு நடத்தப்படும்.
• வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு: துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன், டொரண்டோ, நியூயார்க், சிட்னி, பிராங்க்பர்ட், பாரீஸ், பஹ்ரைன், கத்தார், குவைத், ரியாத், ஜெட்டா, வாஷிங்டன், சிகாகோ, லாஸ்-ஏஞ்சல்ஸ், டோக்கியோ, ஜோகான்ஸ்பெர்க், ஆக்லேண்ட் ஆகிய இடங்களில் வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு அமைக்கப்படும்.
• உங்கள் ஊரில் உங்கள் முதலீடு: வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் முதலீடு செய்வதற்கு வசதியாக 38 மாவட்டங்களிலும் TIDCO NRI Liaison Officer நியமிக்கப்படுவார்.
• வெளிநாடு வாழ் தமிழர் உடைமைப் பாதுகாப்புத் தீர்ப்பாயம்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்குச் சொந்தமாக தமிழகத்தில் இருக்கும் உடைமைகள் மற்றும் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சட்டச் சிக்கல்களை விரைந்து தீர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர் உடைமைப் பாதுகாப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்படும். இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களின் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆறே மாதங்களில் தீர்க்கப்படும்.To encourage overseas Tamils to invest in Tamil Nadu, the following measures will be undertaken.
• World Tamil Welfare and Investment Commission – brought under the direct control of the Chief Minister, welfare scheme assistance for overseas Tamils and opportunities for them to invest will be facilitated quickly.
• Overseas Tamils Investment Conference: To facilitate overseas Tamils investing in Tamil Nadu's start-up companies, infrastructure and industries, an Overseas Tamils Investment Conference will be held every year.
• Overseas Tamils Welfare Division: Overseas Tamils welfare divisions will be set up in Dubai, Singapore, Kuala Lumpur, London, Toronto, New York, Sydney, Frankfurt, Paris, Bahrain, Qatar, Kuwait, Riyadh, Jeddah, Washington, Chicago, Los Angeles, Tokyo, Johannesburg and Auckland.
• Your investment in your hometown: A TIDCO NRI Liaison Officer will be appointed in all 38 districts to facilitate overseas Tamils investing in their own district.
• Overseas Tamils Property Protection Tribunal: An Overseas Tamils Property Protection Tribunal will be set up to speedily resolve legal issues, including encroachment, on properties and assets owned by overseas Tamils in Tamil Nadu. Through this, property-related problems of overseas Tamils will be resolved within six months.