தூண் 4 · A9 · அறிக்கை ப. 40manifesto p. 40

டிஜிட்டல் படைப்பாளிகள் ஊக்கத் திட்டம்Digital creators incentive scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

டிஜிட்டல் தளங்களில் தமிழ் மண்ணின் வரலாறு, கலை, பண்பாடு, மொழி, உணவு, இசை உள்ளிட்டவற்றின் பெருமைகளை உலகளவில் கொண்டு செல்லும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஒன்றரை லட்சம் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் மண் சார்ந்த படைப்புகளின் தயாரிப்புச் செலவுகளுக்கு நிதியுதவி செய்யப்படும். தமிழகம் முழுக்க 500 படைப்புத் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் வீடியோ புரோடக்ஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கன்டென்ட் ஸ்ட்ராடஜி உள்ளிட்டவற்றுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.The following schemes will be implemented to encourage creators who carry the glories of the Tamil land's history, art, culture, language, food, music and more to the world on digital platforms. One and a half lakh creators will be selected and given financial support for the production costs of their land-rooted creations. 500 creative-skills training centres will be set up across Tamil Nadu. These centres will offer training in video production, digital marketing, content strategy and more.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 40)Manifesto promise (p. 40)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧑‍🎓 இளைஞர்Youth 🎭 மொழி & பண்பாடுLanguage & culture 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital