தூண் 7 · E6 · அறிக்கை ப. 65manifesto p. 65

மத்திய மண்டலம் (திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர்)Central Region (Trichy, Thanjavur, Pudukkottai, Nagapattinam, Mayiladuthurai, Dindigul, Ariyalur, Perambalur, Tiruvarur)

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

• திருச்சி Aerospace and Heavy Engineering மண்டலம் – திருச்சி Aerospace and Heavy Engineering மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். திருச்சி சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் 300 ஏக்கர் பரப்பளவில், Aerospace Fabrication பூங்கா அமைக்கப்படும். • தஞ்சையில் வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்துதல் மண்டலம் – தஞ்சையில் ஏற்றுமதி வசதிகளுடன் கூடிய அரிசி அரவை ஆலைகள், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு மையங்கள், மஞ்சள் மதிப்புக்கூட்டு மையங்கள் ஆகியவற்றை • புதுக்கோட்டை – பெரம்பலூர் கிராளைட் தொழில் மேம்பாடு – புதுக்கோட்டை, பெரம்பலூரில் கிராளைட் மெருகேற்றுதல் மற்றும் வடிவமைப்பு மையம் உருவாக்கப்படும். • திருச்சி – தஞ்சாவூரில் மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா – மருத்துவக் கருவி உற்பத்தியாளர்கள், மருத்துவ ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 300 கோடி ரூபாய் செலவில் மருத்துவ தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். • அரியலூர் கட்டுமானப் பொருட்கள் ஏற்றுமதி மையம் – அரியலூரில் தயாரிக்கப்படும் சிமெண்ட், Hollow Blocks, Fly Ash Bricks ஆகியவற்றை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரயில் வசதியுடன் கூடிய ஏற்றுமதி மையம் உருவாக்கப்படும். • பெரம்பலூர் நவீன வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் மையங்கள் – உழவர் – உற்பத்தியாளர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் 5 வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் மையங்களை நவீனப்படுத்த அரசு நிதியுதவி வழங்கப்படும். • மன்னார்குடி மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு மையம் – மன்னார்குடி மற்றும் திருவாரூரின் கடலோரப் பகுதிகளில் அபரிமிதமான மீன் வளமும், மீன்வளர்ப்புக்கு சாதகமான சூழலும் நிலவுவதால், அங்கு மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்புக்கான மையம் அமைக்கப்படும். அங்கு, இறால் மற்றும் மீன்களுக்கான நவீன ஏற்றுமதி வசதிகள் அமைக்கப்படும். • திருவாரூர் காவிரி வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் மையம் – ஏற்றுமதி வசதிகளுடன் கூடிய புழுங்கல் அரிசி அரவை மில்கள், உலர் பழங்களுக்கான யூனிட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் மையம் திருவாரூரில் அமைக்கப்படும். ஆர்காணிக் முறையில் விளைவிக்கப்படும் பொன்னி அரிசி உலகில் சந்தைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். • நாகப்பட்டினம் – மயிலாடுதுறை மீன் ஏற்றுமதி மையங்கள் – குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், நவீன வசதிகளுடன் கூடிய ஏல அரங்குகள், சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யும் தரத்திலான பதப்படுத்தும் யூனிட்டுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நவீன மயமாக்கப்பட்ட மீன் ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படும்.• Trichy Aerospace and Heavy Engineering Zone – Trichy will be declared an Aerospace and Heavy Engineering Zone, and enterprises investing there will be given tax exemption for 10 years. An Aerospace Fabrication park will be set up on 300 acres near Trichy International Airport. • Agricultural produce processing zone in Thanjavur – In Thanjavur, rice mills with export facilities, processed food preparation centres, and turmeric value-addition centres (will be set up). • Pudukkottai – Perambalur granite industry development – A granite polishing and design centre will be created in Pudukkottai and Perambalur. • Medical technology park in Trichy – Thanjavur – To support medical device manufacturers and medical start-up enterprises, a medical technology park will be set up at a cost of 300 crore rupees. • Ariyalur construction materials export centre – An export centre with rail facilities will be created to export cement, Hollow Blocks and Fly Ash Bricks made in Ariyalur to Arab countries. • Perambalur modern agricultural produce processing centres – Government financial assistance will be given to modernise 5 agricultural produce processing centres run by a farmer-producer collective. • Mannargudi fishery and aquaculture centre – Since the coastal areas of Mannargudi and Tiruvarur have abundant fishery resources and an environment favourable for aquaculture, a fishery and aquaculture centre will be set up there. Modern export facilities for prawns and fish will be set up there. • Tiruvarur Cauvery agricultural produce processing centre – An agricultural produce processing centre including parboiled rice mills with export facilities and units for dried fruits will be set up in Tiruvarur. Action will be taken to market organically grown Ponni rice globally. • Nagapattinam – Mayiladuthurai fish export centres – Integrated, modernised fish export centres will be created, including cold storage warehouses, auction halls with modern facilities, and export-grade processing units for export to Singapore and Malaysia.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 65)Manifesto promise (p. 65)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry 🐟 மீனவர்Fisherfolk 🌾 விவசாயம்Agriculture