வடக்கு மண்டலம் (வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை)Northern Region (Vellore, Ranipet, Tirupattur, Tiruvannamalai, Cuddalore, Villupuram, Kallakurichi, Chengalpattu, Tiruvallur, Kanchipuram, Chennai)
• திருப்பத்தூர்-வேலூர்-ராணிபேட்டை தோல் தொழில் மேம்பாட்டுத் திட்டம்: திருப்பத்தூர்-வேலூர்-ராணிபேட்டை மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிலை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான தரத்துடன் செய்வதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு தோல் தொழிலாளருக்கும் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். தோல் பொருட்களுக்கு ISO/BRC சான்றிதழ்கள் வழங்கப்படும். • சென்னை – ஓசூர் – EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு – ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். • சென்னை – ஓசூர் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிப்பு – DRDO மற்றும் HAL நிறுவனங்களில் தமிழகத்தின் நிறுவனங்கள் பணிகளை செய்வதற்கு உரிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் எலைக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்திப் பூங்கா சாம்சங், பாக்ஸ்கான் போன்ற எலைக்ட்ரானிக் நிறுவனங்கள் சார்ந்து உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்காக 500 கோடி ரூபாய் செலவில் உதிரிபாகங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். • வல்லம் – வடகல் Aerospace Park மேம்பாடு – ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வல்லம்-வடகல்லில் உள்ள Aerospace Park தரம் உயர்த்தப்பட்டி, விண்வெளித்துறைக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் செயற்கைக் கோள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மையமாக மாற்றப்படும். • காஞ்சிபுரம் பட்டுச் சுற்றுலா – புவிசார் குறியீடு பெற்றுள்ள காஞ்சிபுரம் பட்டின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இ-காமர்ஸ் ஏற்றுமதி இணையத்தளம் உருவாக்கப்படும். கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சிறு-குறு நிறுவனங்கள் முறைப்படுத்தப்படும். பட்டுச் சுற்றுலா வழித்தடம் ஏற்படுத்தப்படும். • திருவண்ணாமலை கைத்தறி நெசவு மேம்பாடு – திருவண்ணாமலை கைத்தறி நெசவாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், முதலீட்டு நிதி, இ-காமர்ஸ் விற்பனை சேவைகள் வழங்கப்படும். • கடலூர் சிப்காட் துய்மைப்படுத்துதல் – கடலூர் சிப்காட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பிற்கும், மாசு கட்டுப்பாட்டிற்காகவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். • விழுப்புரம் – கடலூர் உயிரி எரிபொருள் மற்றும் எத்தனால் தயாரிப்பு யூனிட் – விழுப்புரம் – கடலூர் மாவட்டங்களின் விவசாயக் கழிவுகளை பக்கவிளைவு உயிரி எரிபொருள் மற்றும் எத்தனால் உற்பத்தி செய்யும் யூனிட்டுகள் அமைக்கப்படும். இதன்மூலம் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்படும். • மறைமலைநகர் சிப்காட் விரிவாக்கம் – சென்னையில் உள்ள மோட்டார் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு உதவும் வகையில், மறைமலைநகரில் தற்போது உள்ள சிப்காட் விரிவுபடுத்தப்பட்டி, EV Battery Testing and Certification Lab-கள் அமைக்கப்படும். • சிறுசேரி சிப்காட் ஐடி பூங்கா (Siruseri SIPCOT IT Park) - சிறுசேரி ஐடி பூங்காவை ஒரு சாதாரணத் தகவல் தொழில்நுட்பப் பூங்காவிலிருந்து மேம்படுத்தி, ஃபின்டெக் (Fintech) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளுக்கான ஒரு சிறப்பு மையமாக தமிழக வெற்றிக் கழக அரசு மாற்றும். இதற்கென பிரத்தியேக ஜிசிசி (GCC – Global Capability Centres) வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த பணிச் சூழல் (Co-working infrastructure) உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். • பசுமை வழி ஸ்டீல் உற்பத்தி – திருவள்ளூரில் உள்ள 'ஸ்டீல் ரோலிங் மில்' காரணமாக உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், பசுமை வழி உற்பத்தியை உறுதி செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். • மப்பேடு சிப்காட் விரிவாக்கம் – வாகனங்களுக்குத் தேவையான சென்சார்கள், செமிகண்டக்டர்கள், EV Control Unit ஆகியவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை ஈடுசெய்யும் வகையில், மப்பேடு சிப்காட்டில் மோட்டார் – எலைக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும். • கள்ளக்குறிச்சி சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி மேம்பாடு – கள்ளக்குறிச்சியில் சர்க்கரை ஆலைகளும், எத்தனால் உற்பத்தி நிறுவனங்களும் நவீனமயமாக்கப்படும். • கள்ளக்குறிச்சியில் புதிய தொழிற்பேட்டை – கள்ளக்குறிச்சியில் சிட்கோ/சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும்.• Tirupattur-Vellore-Ranipet Leather Industry Development Scheme: 500 crore rupees of funds will be allocated to carry out leather tanning industry in Tirupattur-Vellore-Ranipet districts at a standard equivalent to European countries. Skill training will be given to every leather worker and certificates issued. ISO/BRC certificates will be given to leather products. • Chennai – Hosur – EV vehicle spare parts manufacturing – 1500 crore rupees will be allocated to encourage micro and small enterprises that make automobile spare parts to make EV vehicle spare parts. • Chennai – Hosur defence sector equipment manufacturing – Appropriate support and guidance will be given for Tamil Nadu's enterprises to do work in DRDO and HAL. Sriperumbudur – Oragadam electronic spare parts manufacturing park: a spare parts manufacturing park will be set up at a cost of 500 crore rupees for micro and small enterprises engaged in spare parts manufacturing associated with electronic companies such as Samsung and Foxconn. • Vallam – Vadakal Aerospace Park development – The Aerospace Park in Vallam-Vadakal in Sriperumbudur will be upgraded and converted into a centre for making spare parts needed by the space sector and satellite spare parts. • Kanchipuram silk tourism – An e-commerce export website will be created to take the glory of GI-tagged Kanchipuram silk to the world. Micro and small enterprises engaged in handloom weaving production will be regularised. A silk tourism trail will be established. • Tiruvannamalai handloom weaving development – Investment funds and e-commerce sales services will be provided to raise the economy of Tiruvannamalai handloom weavers. • Cuddalore SIPCOT cleaning – 500 crore rupees of funds will be allocated for wastewater treatment and pollution control in Cuddalore SIPCOT. • Villupuram – Cuddalore biofuel and ethanol production unit – Units will be set up to produce biofuel and ethanol as a by-product from the agricultural waste of Villupuram – Cuddalore districts. Through this, environmental damage caused by burning agricultural waste will be reduced. • Maraimalainagar SIPCOT expansion – To support motor spare parts manufacturing in Chennai, the existing SIPCOT in Maraimalainagar will be expanded and EV Battery Testing and Certification Labs will be set up. • Siruseri SIPCOT IT Park - The TVK government will upgrade the Siruseri IT Park from an ordinary information technology park into a special centre for the Fintech and Artificial Intelligence (AI) sectors. For this, dedicated GCC (Global Capability Centres) facilities and integrated Co-working infrastructure will be developed. • Green-path steel production – To control the environmental damage caused by the 'steel rolling mill' in Tiruvallur, 300 crore rupees will be allocated to ensure green-path production. • Mappedu SIPCOT expansion – The demand for sensors, semiconductors and EV Control Units needed for vehicles is increasing. To meet this, a motor-electronics spare parts manufacturing zone will be set up in Mappedu SIPCOT. • Kallakurichi sugar and ethanol production development – Sugar mills and ethanol production enterprises in Kallakurichi will be modernised. • New industrial estate in Kallakurichi – A SIDCO/SIPCOT industrial estate will be created in Kallakurichi.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 64)Manifesto promise (p. 64)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.