இந்தியாவின் முதல் வணிக டிரோன் வழித்தடம்India's first commercial drone corridor
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் சிறப்பு வணிக டிரோன் வழித்தடங்கள் உருவாக்கப்படும். இந்த வழித்தடங்களில், டிரோன்களை வைத்து பொருட்களை விநியோகம் செய்வதற்கும், விவசாய நிலங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கும், கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், பெரிய மேலாண்மைப் பணிகளைச் செய்வதற்கும் காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை. உள்ளூரில் தயாரிக்கப்படும் டிரோன்களையே காவல்துறை கண்காணிப்புப் பணிகளுக்கும், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டுமென்பது கட்டாயமாக்கப்படும். இதன்மூலம், டிரோன் தயாரிக்கும் உள்ளூர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.Special commercial drone corridors will be created in 10 districts of Tamil Nadu. In these corridors, no police permission will be needed to use drones for delivering goods, spraying fertiliser and pesticide on farmland, supervising construction work and large management tasks. Locally made drones must be used for police surveillance and agricultural work, ensuring the growth of local drone-making start-ups.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 69)Manifesto promise (p. 69)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.