தூண் 9 · C3 · அறிக்கை ப. 81manifesto p. 81

மாதிரி கிராமங்கள்; 5000 கிராமங்களுக்கு நகர்ப்புற நவீன கட்டமைப்புModel villages; urban-style modern infrastructure for 5000 villages

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக முதலில் 5000 கிராமங்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அங்கு நகர்ப்புறத்தைப் போல் மேம்பட்ட அதிநவீன கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். அனைத்து நீர்வளங்களையும் புதுப்பிப்பது, விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், சமுதாயக்கூடங்கள், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்கு, வீட்டுக்கு வீடு சென்று திடக்கழிவுகளை பெறுவது மற்றும் கிராமத்தின் அடையாளமான இயற்கை வளங்களை வைத்து கிராம காடுகளை உருவாக்குவது ஆகியவை உருவாக்கப்படும். ஒவ்வொரு ஆண்டு பொங்கலின்போதும் மாதிரி கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த அளவில் செயல்படும் கிராமத்திற்கு வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.As part of Tamil Nadu's integrated development plan, 5000 villages will first be taken as models, where advanced ultra-modern infrastructure like that of urban areas will be built. These will include renewing all water resources, sports grounds, parks, community halls, street lighting on all streets, door-to-door collection of solid waste, and creating village forests using the natural resources that are the village's identity. Model villages will be selected every year during Pongal. A prize of ₹50 lakh for development will be given to the best-performing village.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 81)Manifesto promise (p. 81)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🌳 சுற்றுச்சூழல்Environment 🤝 நலன்Welfare