கிராமப்புறத் தொழில் உள்கட்டமைப்புத் திட்டம்Rural industrial infrastructure scheme
தொழில்முறை கொட்டகைகள், மின்சாரம், குடிநீர், சாலைகள், தளவாடங்கள் (Logistics), சேமிப்பு கிடங்குகள், டிஜிட்டல் இணைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய 1,000 கிராமப்புற தொழில் தொகுப்புகளை (Village Industry Clusters) தமிழக வெற்றிக் கழக அரசு உருவாக்கும். இந்தத் தொகுப்புகள் சுயசார்பு கொண்ட கிராமப்புறப் பொருளாதார மையங்களாகச் செயல்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும் (MSMEs) ஸ்டார்ட்-அப்களையும் ஈர்க்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, சீரான பிராந்திய வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.The TVK government will create 1,000 Village Industry Clusters with integrated infrastructure including industrial sheds, electricity, drinking water, roads, logistics, storage warehouses, digital connectivity and basic facilities for workers. These clusters will function as self-reliant rural economic centres, attracting micro, small and medium enterprises (MSMEs) and startups. Through this, lakhs of jobs will be created and balanced regional development will also be ensured.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 82)Manifesto promise (p. 82)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.