காவிரி டெல்டா சுற்றுச்சூழல் சீரமைப்புCauvery delta ecological restoration
தமிழக விவசாயத்தின் இதயமாக காவிரி டெல்டா படகை திகழ்கிறது. ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடுகளால், காவிரி டெல்டாப் படகையின் நீர்வளம், நிலவளம், வேளாண் உற்பத்தி மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதைச் சரி செய்யும் விதமாக கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். • 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காவிரி டெல்டாப் படகையின் நிலத்தடி நீர் உப்பாகி உள்ள நிலை சிறப்புக் கவனம் எடுத்து சீர் செய்யப்படும். மேலும், வற்றிப்போன நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், மண் வளம் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தனிக் கவனம் எடுத்து சரி செய்யப்படும். • காவிரி டெல்டா படகையை சீரமைக்கும் விதமாக வேளாண் நச்சுயியல் மையம் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்ட பாதிப்பு, ரசாயனங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டு, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.The Cauvery delta basin stands as the heart of Tamil Nadu agriculture. But due to ecological degradation, the water resources, soil fertility and agricultural production of the Cauvery delta basin have faced enormous impact. To set this right, the following measures will be taken. • Rs 5000 crore will be allocated, and the condition of salinated groundwater in the Cauvery delta basin will be given special attention and rectified. Further, measures to raise the depleted groundwater level and measures such as soil fertility restoration will be addressed with separate attention. • To restore the Cauvery delta basin, an agricultural toxicology centre will be set up, and the impact caused by ecological degradation and chemicals in those areas will be studied and measures taken to rectify them.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 50)Manifesto promise (p. 50)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.