மஞ்சள், மாம்பழம், கொப்பரைத் தேங்காய் மதிப்புக்கூட்டும் மையங்கள்!Turmeric, mango and copra coconut value-addition centres!
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஈரோடு மஞ்சள், கிருஷ்ணகிரி மாம்பழம், கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் கொப்பரைத் தேங்காய்களுக்கு அதிக விலை கிடைக்கும் வகையில் அவை மதிப்புக்கூட்டப்படும். • ஈரோட்டில் மஞ்சள் பிரித்தெடுப்புப் பூங்கா அமைக்கப்பட்டு, அதன்மூலம் சாதாரண மஞ்சளில் இருந்து மருந்துப் பொருட்களுக்குப் பயன்படும் அதிக தரம் வாய்ந்த மஞ்சள் பிரிக்கப்படும். இதனால், விவசாயிகள் ஒரே விலையில் அனைத்து மஞ்சளையும் விற்பனை செய்யாமல், தரம் பிரித்து விற்பதால் கூடுதல் விலை கிடைக்கும். • கிருஷ்ணகிரியில் உற்பத்தியாகும் மாம்பழங்களை நேரடியாக சென்னை, பெங்களூரு விமான நிலையம் கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதற்கான சரக்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம் உள்ளூர் சந்தையில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் மாம்பழ உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். • தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் வகையில், கொங்கு மண்டலத்தில் தேங்காய் மதிப்புக்கூட்ட மையம் அமைக்கப்படும்.Erode turmeric, Krishnagiri mango, and copra coconut produced in the Kongu region by Tamil Nadu farmers will be value-added so that they fetch higher prices. • A turmeric extraction park will be set up in Erode, through which high-grade turmeric used for medicinal products will be separated from ordinary turmeric. Because of this, instead of selling all turmeric at a single price, farmers will get a higher price by grading and selling. • Freight transport facilities will be set up to take mangoes produced in Krishnagiri directly to Chennai and Bengaluru airports for export. Through this, mango producers will be protected from being affected by price falls in the local market. • To add value to coconut and coconut products, a coconut value-addition centre will be set up in the Kongu region.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 49)Manifesto promise (p. 49)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.